ஐடியா கல்வி மையம்
Ravi Chandran
சென்னை மாநகராட்சி-இல்
முன்னாள் தலைமையாசிரியர் (பணி நிறைவு) (1988–2016)எழுத்தாளர்
இதற்கு விடையளிக்க முற்றும் தகுதி உள்ளவன் நான்.
ஓரிரு மாதமுன்பே அறிகுறிகள் தோன்றும்.
- மாடிப்படிகள் ஏறும் போது மூச்சிரைக் கும்.
- ஊசிகுத்தினாற்போல் மார்புவலி தோன்றும்.
- மத்யான உணவுக்குப் பின் தலை அதிகமாக வேர்க்கும்.
- உடலில் ஒருவிதமான எரிச்சல் தோன் றும். அதை வயிற்றில் உண்டான எரிச் சல் என்றெண்ணி நாம் ஜெலூசில் கேழ்வரகுக் கூழ் குடிப்போம்.
- இடதுகைப்பக்கம் வலி தோன்றும். யப்பா…இந்த டூவீலர் ரொம்ப்ப் படுத்தறது. வேற வாங்கணும் என்போம்.
- முதுகுவலியும் தோள் வலியும் இடது பக்கமே.
- மாரடைப்பு வருவதற்கு ஓரிரு நாள் முன்னதாக மனத்தில் அமைதியின்மை தோன்றும்…என்னமோ தெரியலே..ஏதோ தவறாக நடக்கவிருப்பது போல் ஒரு உணர்வு தோன்றும்.
- ..திடீரென்று ( இதைவிட வேறு சொல் தெரியேன்) ஓர் நொடியில் நெஞ்சு வலி தோன்றி ஒவ்வொரு நுண் நொடிக்கும்..( மைக்ரோ செகண்டுக் கும்) வலி ராட்சசத் தனமாக அதிகரிக் கும்.
- இரண்டு மூன்று நிமிடங்களில் வலி திடீரெனக் குறைந்து..அடுத்த ஐந்தாவது நிமிடம குபீரென்று….உடல் முழுதும் வேர்க்கும். குளித்ததைப் போல உடலில் உள்ள நீரெல்லாம் வேர்வையாக வெளியேறும்.
- அதனால் தாகம் அதிகமாக எடுக்கும். நீர் குடித்தால் வாந்திவரும். இதுவே இறுதி அறிகுறி. இதற்குள நீங்கள் வசதிமிக்க மருத்துவமனையை நோக்கிப் போய்க்கொண்டிருக்க வேண்டும்.
- இதனை அடுத்த வலி மரண வலி யாகவே இருக்கும் அதற்குள் ..மருத்துவமனையில் ஐசியூ வில் இருக்க வேண்டும். அவர்கள் முதல்உதவி செய்து விட்டால் மூன்று மணி நேரம் ஆசுவாசம். ( கவனிக்க : எட்டாவது பாயிண்டிலிருந்து இந்த 11 வது பாயின்டுக்கு இடையீட்டு நேரம்அதிக பட்சம் ஒரு மணி நேரமாக இருக்கவேண்டியது அவசியம் இதுவே மருத்துவர் பாஷையில் கோல்டன் ஹவர்.)
- மாரடைப்பின் வேகத்தை தற்காலி கமாகக் குறைத்து வலியை நீக்க ஒரு 💉 ஊசி செலுத்துவர். அதன் விலை..கொஞ்சம் தான். 2016- ல் அது 40,000/= நாற்பதாயிரம் ரூபாய். 2020 ல் 40600/ நாற்பதாயிரத்து அறுநூறு ரூபாய். அது ரத்தத்தின் நீர்மத்தை அதிகமாக்கி இயல்பாகச் செலுத்தும். வலியை முற்றிலும் .நீக்கவும் செய்யும்.
- ஆனால், இதயத்தின் அடைப்பு என்னமோ அப்படியேதான் இருக்கும். ஒருசில நாட்களில் ஆஞ்சியோ கிராம் செய்து அடைப்பு எங்குள்ளது என்பதை அறிவர்.
- பின்.மறுநாள் ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து அடைப்பிருக்கும் இடத்தில் விரிவலைக் குழாய் ஸ்டென்ட்………stent…பொருத்திவிடுவர்.
- இதன் பின் நாக்கைக கட்டிக் கொள்ள வேண்டியதுதான். மீறி நாக்கை ரொம்ப நீட்டினால்….(.மீண்டும்…முதல் பாயின்டிலிருந்து…..)
- மாரடைப்பு வலியாக மட்டுமே தோன்றும் என நினைக்கக் கூடாது. நெஞ்சை இறுக்குவது போல்…யாரோ அழுத்துவது போல் வலி தொடங்கும்..
- மாரடைப்பு பின்னிரவில்.(.பிரம்ம முகூர்த்தம் பார்க்கும் என்னமோ? ) தான் அதிகமாகத் தாக்கும்…அதிருஷ்டமும் இறைவனருளும், ஆயுள்நிலையும் பொருந்தக் கூடினால்…அந்த நேரத்தில் விழிப்பு தோன்றும்.
- உடனே பரபரவென்று முதலுதவிக் கென மாத்திரைகள் சில வற்றைச் சொல்லியிருப்பர் மருத்துவர்கள். அந்த மாத்திரைகளை ஒரே வேளையில் விழுங்க வேண்டும். அப்படி செய்தால் வலி குறையும்.
- அதன் பின் மருத்துவரை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அணுக வேண்டும். அவரிடம் விடியலில் நெஞ்சு…என்றால்…அவர் கேட்கும் அடுத்த கேள்வி….எத்தனை மணிக்கு…என்பதுதான்….
- கவனம் கவனம்.
- பின் குறிப்பு..மகாத்மாகாந்தியைவிட நூறளவு உயர்ந்தவரும் நேருவாலும் பிறராலும் நெருங்கக் கூட முடியாதவரும் ஆகிய மாமனிதனாகிய பெருந்தலைவர் காமராஜர், 1975 அக்டோபர் முதல் தேதி மதிய உணவு உண்ட பின் தலை மிக அதிகமாக வியர்ப்பதை உணர்ந்தார்…. வைரவா. .என்னமோ மாதிரியாக இருக்கு என்றார்…. இரவு படுக்கச் செல் லும் போது நள்ளிரவை நெருங்கி யிருந்த் து..வைரவா விளக்கை அணைச் சுட்டுப்போ….என்றார். வைரவனும் அணைத்துவிட்டுச் சென்றார். பெருந்தலைவர் உறங்கினார். மீளா உறக்கம்…அவருக்குப் பின்னிரவில் தூக்கத்தில் வந்த மாரடைப்பு..அவர் உயிரை உடலில் இருந்து சற்றும் வலியோ வேதனையோ தராமல் பூவைப் போல பறித்துச்சென்று 2.10 1975 அன்று இறைவனடிக்கீழ் சேர்த்தது.😭😭😭
- த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம் உர்வாருகம் இவ பந்தனாத் ம்ருத்யோ ம்ருத்யுர் யமாம்ருதாத்.. உர்வாருகம்…என்றால் வெள்ளரிப்பழம் . அது கொடியி லிருந் து எந்த அறிகுறியும் இன்றிப் பிரிவது போல….
- சிலரைப்போல் ( பெருந்தலைவரை) மாதக்கணக்கில் வருஷக்கணக்கில் பாயில் படுத்து நோயில்வாட்டி வதைத்து பின் உயிரை எடுக்காமல் அவர் நோவு தெரியாமல் அமைதியாக வாடா மகனே என்று இரு கைகளிலும்தாங்கி அழைத்துச்சென்றான் இறைவன்.