Today

ஐடியா கல்வி மையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. வருக வருக. SSLC and HSE( +1 and +2 ) May 2025 Questions and Answer Key Available Coming soon Time :
Select a Site
Select My other Site
Select a University

வருகையைப்பதிவு செய்யுங்கள்








06 October 2022

வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான புதிய நடைமுறை 01-10-2022

ஐடியா கல்வி மையம் tamil nadu rolls out fresh guidelines for issuing legal heir certificates வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. வாரிசு சான்றிதழ் வழங்குவதில் புதிய முறை: யாருக்கு யார் வாரிசு? என விளக்கம் இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, சான்றிதழில் இறந்தவரின் கணவர் அல்லது மனைவி, மகன் அல்லது மகள் வாரிசாக அறிவிக்கப்படுவர். திருமணம் ஆகாதவர் இறந்தால், தந்தை, தாய், சகோதரர், சகோதரிகள் வாரிசுகளாக அறிவிக்கப்படுவர் உள்ளிட்ட புதிய மாற்றங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. தற்போது சர்வர் பிரச்சனையால் ஏராளமான விண்ணப்பங்கள் தேங்கியுள்ளதாக கூறப்படுகிறது. =================

================== வாரிசு சான்றிதழ் பெற புதிய வழிகாட்டுதல்கள்: நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய் துறை வெளியிட்டது சென்னை: சட்டப்படியான வாரிசு சான்றிதழ் பெறுவதற்கும், அதை வழங்குவதற்கும் புதிய வழிகாட்டுதல்களை, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வருவாய் துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையருக்கு தமிழக வருவாய் துறை செயலர் குமார் ஜெயந்த் அனுப்பியுள்ள கடிதம்: சட்டப்படியான வாரிசுகளுக்கான வாரிசு சான்றிதழ்களை தாசில்தார் வழங்குவதற்கு, வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு இதை ஆய்வு செய்து, விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, இறந்தவர் வசித்த பகுதியில் உள்ள தாசில்தாரிடம், வாரிசு சான்றிதழ் கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஒருவேளை, அவர் அந்த முகவரியில் 6 மாதத்துக்கும் குறைவாக வசித்திருந்தால், ஓராண்டுக்கு அதிகமாக வசித்த பகுதியின் தாசில்தாரிடம் இருந்து அறிக்கை பெற வேண்டும். இறந்தவர் திருமணம் ஆனவராக இருந்தால், அவரது தந்தை, தாய், துணை, மகன், மகளின் பெயர்கள் சான்றிதழில் இடம்பெறலாம். திருமணம் ஆகாதவராக இருந்தால், தந்தை, தாய், சகோதரர்கள், சகோதரிகளின் பெயர் இடம்பெறலாம். அதே நேரம், இறந்த ஒருவருக்காக வேறொருவர் சான்றிதழ் பெற வேண்டுமானால், இறப்பு சான்றிதழ், 7 ஆண்டுகளுக்கு மேல் காணாத நிலையில் இறந்துவிட்டதாக சம்பந்தப்பட்ட நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு, இறந்தவரின் ஆதார், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், வங்கி புத்தகம், ஓட்டுநர் உரிமம், பென்ஷன் உத்தரவு உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல, இறந்தவருடனான உறவு தொடர்பாக, திருமண பதிவுச் சான்று, பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, சாதிச் சான்று, ஓட்டுநர் உரிமம், பிறப்புச் சான்று, பள்ளி மாற்றுச்சான்று உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை அளிக்கலாம். ஒருவேளை, வயது வந்த வாரிசு இல்லாத பட்சத்தில் மைனர் வாரிசுக்காக பாதுகாவலர், சகோதரர், சகோதரி வாயிலாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். இறந்தவர் குழந்தையை தத்தெடுத்திருந்தால், அவருக்கான வாரிசு சான்றிதழை வழங்குவதற்கு முன்பு, அவர் சட்டப்படி தத்தெடுக்கப்பட்டவரா என்பதை தாசில்தார் உறுதி செய்ய வேண்டும். சட்டப்படியான வாரிசு சான்றிதழில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால், தாசில்தாரின் உத்தரவை எதிர்த்து வருவாய் கோட்டாட்சியரிடம் ஓராண்டுக்குள் முறையிட வேண்டும். அதற்கு மேல் மாவட்ட வருவாய்அதிகாரியிடம் முறையிடலாம். ஒரு வாரத்தில் சான்றிதழ்: வாரிசு சான்றிதழ் பெற ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆய்வுக்கு பிறகு, விண்ணப்பத்தை அவர்கள் தாசில்தாருக்கு பரிந்துரை செய்வார்கள். தாசில்தார் ஒருவாரத்துக்குள் சான்றிதழ் அளிக்கவேண்டும். தவறான தகவல்கள் அளிக்கப்பட்டதை கண்டறிந்தால் சான்றிதழை ரத்து செய்வதற்கும், அதை வழங்கிய அதிகாரிக்கு அதிகாரம் உண்டு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பொது சேவை மையத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விவரம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ,திருச்சிராப்பள்ளி மாவட்டம் வருமான சான்று விண்ணப்பதாரரின் புகைப்படம் குடும்ப அட்டை அரசு அல்லது தனியார் நிறுவன வருமான சான்று தொழில் வருமானம் பற்றிய விபரம் பெற்றோர் தொழில் அல்லது பணி விபரம் சாதிச் சான்று விண்ணப்பதாரரின் புகைப்படம் பள்ளி மாற்று சான்றிதழ் தாய் அல்லது தந்தை சாதிசன்று குடும்ப அட்டை இருப்பிட / பிறப்பிட சான்று விண்ணப்பதாரரின் புகைப்படம் குடும்ப அட்டை கணவனால் கைவிடப்பட்டோர் சான்று விண்ணப்பதாரரின் புகைப்படம் குடும்ப அட்டை வருமானம் பற்றிய விபரம் நிலம் அல்லது சொத்து பற்றிய விபரம் விவாகரத்து குறித்து நீதிமன்ற தீர்ப்பு முதல் பட்டதாரி சான்று விண்ணப்பதாரரின் புகைப்படம் குடும்ப அட்டை குடும்ப உறுப்பினர் கல்வி குறித்த விபரம் பள்ளி மாற்று சான்றிதழ் மதிப்பெண் பட்டியல் விவசாய வருமான சான்றிதழ் விண்ணப்பதாரரின் புகைப்படம் சிட்டா அடங்கல் (கடந்த ஒரு வருடம்) குடும்ப அட்டை (அ) முகவரி சான்று வாரிசு சான்றிதழ் இறப்பு சான்றிதழ் ஏதேனும் ஒரு அடையாள அட்டை குடும்ப அட்டை (அ) முகவரி சான்று குடிபெயர்வு சான்றிதழ் விண்ணப்பதாரரின் புகைப்படம் குடும்ப அட்டை (அ) முகவரி சான்று திருமண அழைப்பிதழ் (அ) திருமண சான்று சிறு குறு விவசாயி சான்றிதழ் விண்ணப்பதாரரின் புகைப்படம் குடும்ப அட்டை (அ) முகவரி சான்று சிட்டா அடங்கல் கிரையப் பத்திரம் வில்லங்க சான்றிதழ் வசிப்பிட சான்றிதழ் விண்ணப்பதாரரின் புகைப்படம் குடும்ப அட்டை (அ) முகவரி சான்று ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் பெற்றோரின் சேர்ந்த புகைப்படம் முதல் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் கடைசி குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பெற்றோரின் குடும்ப கட்டுப்பாடு சான்றிதழ் கலப்பு திருமண சான்றிதழ் கணவன் மற்றும் மனைவியின் சேர்ந்த புகைப்படம் குடும்ப அட்டை (அ) முகவரி சான்று திருமண பதிவு சான்று மணமகளின் சுய அறிவிப்பு சான்று (அ) மாற்றுச் சான்றிதழ் மணமகனின் சுய அறிவிப்பு சான்று (அ) மாற்றுச் சான்றிதழ் சொத்து மதிப்பு சான்றிதழ் விண்ணப்பதாரரின் புகைப்படம் சிட்டா (அ) பட்டா வில்லங்க சான்றிதழ் சமீபத்திய வழிகாட்டு மதிப்பு அறிக்கை. கட்டிடத்தின் மதிப்பு பொறுப்புக்கள் அளவு(Liabilities) சான்றிதழ் அடமான சான்றிதழ் சொத்து வரி திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ் விண்ணப்பதாரரின் புகைப்படம் குடும்ப அட்டை (அ) முகவரி சான்று வயது சான்று விதவை சான்றிதழ் விண்ணப்பதாரரின் புகைப்படம் குடும்ப அட்டை (அ) முகவரி சான்று கணவரின் இறப்பு சான்றிதழ் திருமண அழைப்பிதழ் (அ) திருமண பதிவு சான்று மனுதாரரின் சுய அறிவிப்பு அடகு வணிகர் உரிமம் விண்ணப்பதாரரின் புகைப்படம் குடும்ப அட்டை (அ) முகவரி சான்று மனுதாரரின் நன்னடத்தை சான்றிதழ் செலுத்துச் சீட்டு படிவம் ‘அ’ நியமனதாரரின் நன்னடத்தை சான்றிதழ் நியமனதாரரின் முகவரி சான்றிதழ் நியமனதாரரின் செல்வநிலை(Solvency) சான்றிதழ் கடை முகவரிக்கான ஆதாரம் இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி / கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ் விண்ணப்பதாரரின் புகைப்படம் குடும்ப அட்டை (அ) முகவரி சான்று FIR or CSR நகல் தொலைந்த சான்றிதழின் நகல் வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ் விண்ணப்பதாரரின் புகைப்படம் குடும்ப அட்டை (அ) முகவரி சான்று மாற்று சான்றிதழ் கல்வித் தகுதி சான்று கடன் கொடுப்போர் உரிமம் விண்ணப்பதாரரின் புகைப்படம் குடும்ப அட்டை (அ) முகவரி சான்று மனுதாரரின் நன்னடத்தை சான்றிதழ் செலுத்துச் சீட்டு படிவம் ‘அ’ நியமனதாரரின் நன்னடத்தை சான்றிதழ் நியமனதாரரின் முகவரி சான்றிதழ் நியமனதாரரின் செல்வநிலை(Solvency) சான்றிதழ் கடை முகவரிக்கான ஆதாரம் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு சான்றிதழ் விண்ணப்பதாரரின் புகைப்படம் குடும்ப அட்டை (அ) முகவரி சான்று சாதி சான்றிதழ் வருமான வரி விவர அறிக்கை வருமான சான்றிதழ் (அ) ஊதிய சான்று

ads

விளம்பரம்

My Popular Posts